இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர்ஸ்டார் ஆந்தம் ரிலீசாகி உள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜூன், பிக்பாஸ் லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஃபிரெண்ட்ஷிப். இந்த படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வருகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது . இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இந்த படத்தை சேன்டோ(Senatoa) ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பாக ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்துக்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.