மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாம்…… ஜெ. தீபா ‘அதிர்ச்சி’ தகவல்

சென்னை:

க்களவை தேர்தலில்  எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர்  ஜெ.தீபா அறிவித்து உள்ளார்.

கடந்த 16ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த தீபா,  எங்களின்  கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டது, இருந்தாலும் யாரேனும் எங்களை அழைத்தால் அவர்களை கூட்டணியில் சேர்ப்பது குறித்து  ஆலோசிப்போம் என்று பகட்டாக கூறியவர், தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றும் பரபரப்பாக கூறினார்.

இந்த தகவலை தீபா சொல்லி ஒருவாரமே ஆன நிலையில், தற்போது மாற்றி பேசி வருகிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய , எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர், தீபா, மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறியவர், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அதிமுக உடன் இணைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியவர், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தீபாவின் முரண்பட்ட தகவல்கள் பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.