மம்தாவுக்கு ஆதரவு: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் தெலுங்கான முதல்வர்

ஐதராபாத்:

ன்று பிரதமர் மோடி தலைமையில் 5வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதா  தகவல் வெளியாகி உள்ளது.

மம்தாவுடன் கேசிஆர் (பைல் படம்)

ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று டில்லி குடியரசு தலைவர்  மாளிகையில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், தலைமை செயலாளர்கள் உள்பட உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் உள்பட பலர் டில்லிக்கு சென்றுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா நிதியோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் மம்தாவுக்கு தோள் கொடுக்கும் வகையில்,  நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed