பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு! மக்களை குழப்பும் சரத்பவார்

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து, ஆட்சி அமைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது, அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு, இது தேசிவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்று கட்சித் தலைவர் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், நேற்று இரவு பாஜகவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, அஜித்பவாருடன், சரத்பவாரும் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை குழப்பும் நோக்கில் சரத்பவார் செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளன.

மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த மாதமே தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைவதிலும் சிக்கல்நீடித்தது.

இந்த நிலையில், நேற்று மாலை வரை சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை திடீர் திருப்பமாக பாஜக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 144 உறுப்பினர்கள் தேவையப்படும் நிலையில், பாஜகவின் 105 இடங்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 உறுப்பினர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்த நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், சரத்பவாரின் மருமகனுமான அஜித் பவார் துணைமுதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் முடிவு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அஜித்பவார் முடிவை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்று கட்சித் தலைவரான சரத்பவார் தெரிவித்து உள்ளார்.

பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது தேசியவாத காங்கிரசின் முடிவல்ல என்றும் சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார்.

அஜித் பவார் மீது அமலாக்கப்பிரிவு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பார்  என்று முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், என்சிபி தலைவர் சரத் பவார் சம்மதத்து டன்தான் இந்த கூட்டணி உருவாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு பாஜக தலைவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அஜித் பவாருடன் சரத் பவாரும் பங்கேறுள்ளார். அவரின் சம்மத்தின் பெயரில்தான் பாஜகவுக்கு என்சிபி ஆதரவு அளித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதுபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்தபோதே, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதாகவும், மக்களை குழப்பும் வகையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாக சில நேரங்களில் தெரிவித்தும், பின்னர் நாங்கள் அதுகுறித்து பேசவில்லையே என்றும் சரத்பவார் மாற்றி மாற்றி பேசி வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.