மும்பை,

றுகளைப் பாதுகாக்காத மகாராஷ்டிர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறுகளை சரிவர பாதுகாக்க வில்லை என கூறி அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் ஓடும் ஆறுகலான அல்ஹாஸ் மற்றும் வால்துனியில் சரிவர தூர் வாரப்பட்டு மராமத்து பணிகள் செய்யப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக, அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, வனசக்தி என்ற  தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு  பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் கடந்த  2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், கவனக்குறைவாக இருந்ததாக,  மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநகராட்சி  மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.  உயர்நீதி மன்றம்  பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதை எதிர்த்து, வனசக்தி  தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

அதில், அரசுக்கு, இரண்டு  ஆறுகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தூர் வாரப்பட, ஆற்றை  புணரமைப்பு செய்ய  ரூ100 கோடியை மகாராஷ்டிராக மாநில அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் ஆற்றில் கழிவுகளை கலக்கச்செய்யும் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறி உள்ளது.