ப.சிதம்பரம் ஜாமின் மனுமீதான விசாரணை! நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது  செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ள  முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், விசாரணையை நாளைக்கு உச்சநீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். பின்னர் அதே வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அமலாக்கத்துறை தொடர்துள்ள வழக்கில், ஜாமின் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது.