சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் எதிர்த்து வழக்கு: உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை

டில்லி:

சிபிஐயின்  இடைக்கால இயக்குநராக   நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ அதிகார்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தும் படியும், பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாஷ் பூஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

பிரசாந்த் பூஷன்

இந்தியாவின் பெருமைமிக்க புலனாய்வு அமைப்பான சிபிஐ-ல், அதன்  இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே லஞ்சம் புகார் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.  தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில்,சிபிஐ அலுவலகத்திலேயே சிபி ரெய்டு நடைபெற்றது.  இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பையும், சிபிஐ மீதான எண்ணத்தையும் அடியோடு நிலைகுலைய செய்தது.

இந்த நிலையில், இருவரையும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லும்படி மத்திய அரசு பணித்தது. அதைத்தொடர்ந்து  இடைக்கால சிபிஐ டைர்க்டராக,  இணை இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. அவரும் உடனே பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்த நாகேஸ்வர் ராவை இடைக்கால இயக்குநராக நியமித்து  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், ராகேஸ் அஸ்தானா உள்பட சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தும்படியும்  பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், நாளை விசாரிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

You may have missed