ஐபிஎல் போட்டிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக லோதா குழு விசாரணை நடத்தி சில பரிந்துரைகளை செயல்படுத்த பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியது. ஆனால் பி.சி.சி.ஐ. லோதா குழுவின் பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தவில்லை. இதனால் உச்ச நீதிமன்றம், பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையே எந்த பணப் பரிமாற்றமும் செய்ய முடியாதபடி முடக்கியது.

anurag-thakur-afp_806x605_41476705824பணப் பரிமாற்றத்தை முடக்கியதால், இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நடத்துவதில் பி.சி.சி.ஐ.க்கு சிக்கல் ஏற்பட்டது. பணப்பரிமாற்றத்துக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் இந்தியா – இங்கிலாந்து தொடரை நடத்த வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, நாளை நடைபெற உள்ள ராஜ்கோட் டெஸ்ட் போட்டிக்கான செலவுத்தொகை ரூ.58.6 லட்சத்தை மட்டும் பணப்பரிமாற்றம் செய்ய பிசிசிஐக்கு அனுமதி அளித்தார்.

உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.