சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பபட்ட நிலையில், ஆலையை மூடி தமிழகஅரசு சீல் வைத்தது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், டி ல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில்,  நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கியது.

இது தூத்துக்குடி பகுதியில் மீண்டும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்திய நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தெரிவித்து உள்ளது.

மேலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையின் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.

ஆனால், தமிழக அமைச்சர்களோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது… என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்கள்… என்ன நடக்கப்போகிறது என்பதை விரைவில் காணலாம்..