பாஜக மட்டுமல்ல அனைவருமே ராமர் கோயில் வேண்டும் என்கிறார்கள் – அமித்ஷா 

டெல்லி: ராமர் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் ஜனவரியில் வழக்கு ஆரம்பிக்கும் என நம்புகிறேன் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

பாஜக எம்பிகள் சங் பரிவாருடன் இணைந்து சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என கூறிவருகின்றனர். இந்த நிலையில் அதே இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று பாஜக மட்டும் கூறவில்லை.  மொத்த நாட்டு மக்களும் அதை விரும்புகின்றனர் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றம் தினம் தினம் ராமர் கோயில்   வழக்கை நடத்தினால் பத்தே நாட்களுக்குள் இந்த வழக்கு முடிந்து விடும் எனவும் கூறியுள்ளார்.