செல்லாத ரூபாய்களை மாற்ற மறுப்பது ஏன்?….ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

--

டெல்லி:

ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மார்ச் 31-ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பி க்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.இந்த நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதன் பின் அந்த நோட் டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் 2017ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். ரிசர்வ் வங்கியும் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே செல்லாத ரூபாய் நோட்டுகள் மார்ச் 31ஆம் தேதி வரை மாற்றப்ப டும் என்று ரிசர்வ் வங்கி கிளைகள் கூறி வருகிறது.

இது குறித்து சரத் மிஸ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மார்ச் 31ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட் டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடியும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதித்துள்ளனர் என்று சரத் மிஸ்ரா மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, மனுதாரரின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும், விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.