தகவல் ஆணைய காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?….உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி:

ஜனநாயக நாட்டில் அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை எழுத்துப்பூர்வமாக பெற்று மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு என மத்திய, மாநில அரசு துறைகளில் தனி அலுவலர்கள் இருப்பார்கள். இதேபோல் மத்திய, மாநில தலைமை தகவல் ஆணையங்களில் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் மத்திய தகவல் ஆணையத்தில் 4 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. அதோடு கடந்த டிசம்பரில் மேலும் 4 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பரத்வாஜ் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரில அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘காலி பணியிடங்களை நிரப்ப 2016ம் ஆண்டில் விளம்பரம் செய்தும் ஏன் இன்னும் நிரப்பவில்லை?. மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் காலிப் பணியிடங்கள் இருப்பது கவலை அளிக்கிறது. இது குறித்துமத்திய அரசும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், கேரளா, ஒடிசா, கர்நாடகா ஆகிய 7 மாநில அரசுகளும் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதில் காலிப் பணியிடங்களை நிரப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதில் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் காரணமாக அதிப்படியான மனுக்கள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed