தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல் தேவை! உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி:

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்  அஸ்வினி குமார் குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் குறித்து பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.

இதை ரத்து செய்து,  குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும்,  இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும், 4 சதவிகித சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அஸ்வினி குமார்,

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கள்  ரஞ்சன் கோகாய் மற்றும் ரவின் சின்ஹா ஆகியோர்,அரசியல்வாதிகளின் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு  ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என   வழக்கு சம்பந்தமாக மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரிசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு  உத்தரவிட்டனர்.