சென்னை,

மிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், தமிழில் தீர்ப்பு வழங்க உச்சநீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் தொன்மையான 10  மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இன்று அந்த தமிழ் மொழிக்கும் ஆபத்து வந்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசின் கையாலாகத தனத்தால் தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை பறிபோய்க்கொண்டு வருகின்றன.

காவிரி நீர், முல்லை பெரியாறு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பனை, ஆந்திர அரசு தடுப்பனை, நீட் தேர்வு, இந்தி கட்டாயம், உதய் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், விவசாயிகள் பிரச்சினை இப்படி பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் இயலாதக நிலையை பயன்படுத்தி  மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் தமிழில் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தமிழகத்திற்கு விழுந்த மற்றொரு இடி.

தமிழகத்தில் உள்ள கீழமை நீதி மற்ங்களில் தமிழில் மட்டும்  தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

இது தமிழக மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. பெரும்பாலோனோர் ஆங்கில அறிவு இல்லாததால், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், ஐகோர்ட்டின் தீர்ப்பை  எதிர்த்து வழக்கறிஞர் தமிழினத்துரோகி  வசந்தகுமார் தொடர்ந்த வழக்கில்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம்  தடைவிதித்து உள்ளது.

மேலும் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு வழக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்த்துள்ளது.

1994ம் ஆண்டு  தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,  தமிழ்நாட்டை ஆண்டு வரும்  திறமையற்ற நிர்வாகத்தினரால், மத்திய அரசும், அதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டும் பல்வேறு நெருக்குதல்களை கொடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழில் தீர்ப்பு எழுத தடை விதித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.