டில்லி:

யோத்தி சர்சசைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு வரும் 29ந்தேதி உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென விசாரணை நடைபெறாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில்  இருந்து 2 நீதிபதிகள் விலகிய நிலையில், புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வரும் 29ந்தேதிமுதல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 29ந்தேதி விசாரணைக்கு நீதிபதி ஒருவர் வர முடியாத நிலையில்,  விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது.

ஏற்கனவே அமைக்கப்பட்ட அமர்வில் இருந்து, நீதிபதிகள் யு.யு.லலித், ரமணா விலகிய நிலையில், புதிய நீதிபதிகளாக  அப்துல் நஷீர்,  நீதிபதி அசோக் பூஷன் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 29ந்தேதி வழக்கு விசாரணை  நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,.  உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 29-ம் தேதி  அயோத்தி நிலவிவகார மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்தே அன்று வரஇயலாத நிலையில் இருப்பதால், அன்று நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் எப்போது விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.