டில்லி,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள, அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி விவகாரத்தில், அவரை பதவியை விட்டு நீக்குமாறு, உச்சநீதி மன்ற தலைம நீதிபதி மிஸ்ரா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு புகார் தொடர்பாக  அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுக்லாவை பதவி விலகக்கோரி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  உத்தரவிட்டர். ஆனால் இதை ஏற்க நீதிபதி சுக்லா  மறுத்துவிட்டார். இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட பணிகளை நீக்குமாறு அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி  வரும் நிலையில், சுக்லாவை பதவி நீக்க கோரி, குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடிதம் எழுதி உள்ளார்.

குஜராத்தில், உச்சநீதி மன்ற உத்தரவை மீறி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு  தனியார்  மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் புகார் கூறியதை தொடர்ந்து,

தற்போதைய சென்னை ஐகோர்ட்டின்  தலைமைநீதிபதி  இந்திரா பானர்ஜி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழுவின் விசாரணையை தொடர்ந்து, அவர்மீதான குற்றச் சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவரை பதவி விலகுமாறு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.

ஆனால், சுக்லா பதவி விலக மறுத்துவிட்டார். இதன் காரணமாக சுக்லாவுக்கு நீதித்துறை சார்ந்த எந்த பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என அலகாபாத் ஐகோர்ட்டிற்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பிரச்சினை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சுக்லாவை பதவியை விட்டு நீக்குமாறு ஜனாதிபதிக்கு தலைமைநீதிபதி மிஸ்ரா கடிதம் எழுதி உள்ளார்.