திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி:

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா  உள்பட 3 வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

திருவாரூர் இடைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக இன்று காலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்து முடிவைக்கப்படுவதாக  உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் கஜா நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால்,   திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா  உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் முதலில் மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் வற்புறுத்தி யதை தொடர்ந்து இன்று விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை  தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இது குறித்த வழக்குகளை முடித்து வைப்பதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி