லண்டன்

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கியதற்காகப் பிரதமர் போரிஸ் ஜான்சம் மீது அந்நாட்டு உச்சநீதிம்ன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரசு ஐரோப்பியக் கூட்டுறவு நாடுகள் அமைப்பில் இருந்து விலக தீர்மானம் செய்தது அதையொட்டி அப்போது பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த தெரசா மே இது குறித்து மக்களின் கருத்துக் கணிப்பு தேர்தலை நடத்தினார். இந்த தீர்மானத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்த போதிலும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஆதரவு அளிக்கவில்லை.

அதையொட்டி தெரசா மே பதவி விலக நேரிட்டது. தெரசா மேவுக்கு அடுத்த படியாக போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவி ஏற்றார். அவரும் ஐரோப்பியக் கூட்டுறவு நாடுகள் அமைப்பில் இருந்து விலகுவதில் தீவிரம் காட்டினார். இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையொட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குப் பதில் பாராளுமன்றத்தை முடக்கினார். இவ்வாறு நாடாளுமன்றத்தை அக்டோபர் 10 வரை முடக்க பிரிட்டன் அரசி எலிசபெத் ஒப்புதல் அளித்தார். ஆனால் போரிஸ் ஜான்சன் தற்போதைய நாடாளுமன்றத்தை ரத்து செய்து விட்டு புதிய தேர்தல் நடத்த முடிவு செய்தார்.

இதை எதிர்த்து பிரிட்டன் அரசியல் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்ப்பில், “நாடாளுமன்றத்தை ரத்து செய்தது சட்டவிரோத நடவடிக்கை ஆகும். எனவே உச்சநீதிமன்றம் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தை ரத்து செய்யும் போரிஸ் ஜான்சன் உத்தரவை நீதிமன்றம் நிராகரிப்பு செய்கிறது. எனவே மீண்டும் நாடாளுமன்றம் உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி கூட்டப்பட வேண்டும்.” என தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளின் குழுவில் இடம் பெற்றிருந்த 11 நீதிபதிகளும் இந்த தீர்ப்பை ஆதரித்துள்ளனர்.