மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி

டில்லி:

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அய்யாக்கண்ணு  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மெரினாவில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது  என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் விவசாய சங்க தலைவர் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த  தனி நீதிபதி, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உயர்நீதி மன்ற அமர்வில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதி யின் உத்தரவை ரத்தும்,‘மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது.

இதை எதிர்த்தும்,  மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரியும் உச்சநீதி மன்றத்தில், அய்யாக்கண்ணு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்றும், இதுகுறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து, அய்யாக்கண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.

You may have missed