காஷ்மீர் சட்டமன்ற கலைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டில்லி:

ம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம்,  மனுவில் முகாந்திரம் இல்லை என கூறி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக மக்கள் ஜனநாயக கூட்டணி  ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டது. அதைய்டுத்து,  கடந்த ஜூன் மாதம் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஜக தவிர மற்ற கட்சிகள் இணைந்து முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காஷ்மீரில்  அரசியல் குழப்பத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தவிர மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன என்று தெரிந்த பின் சட்டமன்றத்தைக் கலைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆட்சி கலைப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.

You may have missed