வாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிட்டார். அவருக்கு எதிராக, எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர், தேஜ் பகதுார் என்பவர், சமாஜ்வாதி கட்சி சார்பில், வேட்புமனு தாக்கல் செய்தார்.

எல்லை பாதுகாப்பு படையில் இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் மனு செய்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந் நிலையில்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு சரியே என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.