டில்லி

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் செயின் ஆனந்த் இன்று காலமானார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1998 முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆதர்ஷ் செயின் ஆனந்த்.  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலமானார்.  கடந்த 1936ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று பிறந்த இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்.

ஜம்முவில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ஜம்மு காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் ஆதர்ஷ் படித்தார். தனது 38 ஆவது வயதில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 1989 முதல் இரண்டு ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தவர்.  அது தவிர தேசிய சட்ட அணையத்தின் தலைவர் பதிவியும் வகித்தவர் ஆவார்.

ஆதர்ஷின் மகள் முனிஷா காந்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.