புதுடெல்லி: வாக்களித்தப் பிறகான சின்ன அடையான சரிபார்ப்பு சீட்டு பெறும் நடைமுறையை அதிகரிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, “எந்தவொரு நிறுவனமும், நீதித்துறை உட்பட, மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்பதிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது.

இது ஒரு மனதிருப்தி தொடர்பான விஷயம்தானே தவிர, வாக்களிப்பு நடைமுறையை சிறுமைப்படுத்தி தூற்றுவதற்கான விஷயமல்ல” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்”.

எனவே, தற்போது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில், ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 என்ற வகையில், விவிபிஏடி சீட்டு நடைடமுறையை அதிகரிக்க, தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதா? என்பது குறித்து பதிலறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

– மதுரை மாயாண்டி