ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு

டில்லி:

என்எக்ஸ்  மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு விசாரணை நாளையும் தொடரும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,  மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி தம்பதியால் நடத்தப்பட்ட ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு  சட்ட விரோதமாக விதிமுறை களை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும். மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்திற்கு  சொந்தமான நிறுவனத் திற்கு பணம் வந்துள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டது.  அப்போது ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால், அவரது அனுமதியின் பேரிலேயே இந்த முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு டில்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்க உடனே  உச்சநீதி மன்றம் மறுத்துரவிட்ட நிலையில், சிதமபரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையில், அமலாக்கத்துறை சார்பில், பண மோசடி குற்றச்சாட்டில் சிதம்பரத்தை கைது செய்ய விசாரிக்க முயற்சி செய்தது.

இந்த நிலையில், சிதம்பரத்தின் முன்ஜாமன் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நிலையில் வழக்கின் விசாரணை கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக நடைபெற்று வருகிறது.

இன்றும் முன்ஜாமின் மனு மீதான விசாரணை தொடர்ந்த நிலையில், விசாரணை நாளையும் தொடரும் என்று கூறிய நீதிமன்றம், அதுவரை  அமலாக்க இயக்குநரகம் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள  இடைக்கால தடை தொடரும் என்று கூறி உள்ளது.

கார்ட்டூன் கேலரி