வீடியோ காண்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம்..

டெல்லி:

ந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கியமான வழக்குகளை உச்சநீதி மன்றம் வீடியோ காண்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவும் இடமாக நீதிமன்றங்கள் ஆகிவிடக்கூடாது என எச்சரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், வழக்குகள் விசாரணை  நடைபெறுவது குறத்து தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, முக்கியமான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், காணொளி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று தலைமைநீதிபதி பாப்டே தெரிவித்தார்.

மேலும், விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற அறையிலும், வழக்கறிஞர்கள் வெவேறு இடத்தில் இருந்து காணொளி மூலம் வாதாடுவார்கள் என்றும் கடந்த 22ந்தேதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்குகளின் விசாரணை காணொளி காட்சி (video conferencing) வழியாக நடத்தப்பட்டது.