கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் வாரண்ட்

டில்லி:

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா  உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார்.

இதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.