சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ நடத்தும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு….!

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான், சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்ததை அடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை வலுக்க தொடங்கியது .

தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை, சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஹாரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது செல்லுபடியாகும் என்றும், சிபிஐ விசாரணையைக் கோர பிஹாருக்கு உரிமையுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.