டில்லியில் குப்பை குவியல்….துணைநிலை ஆளுனருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி:

டில்லி யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. கடந்த 10ம் தேதி நடந்த விசாரணையில் போது திடக்கழிவு மேலாண்மை அறிக்கை தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது, ‘‘டில்லியில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதை அகற்ற டில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. டில்லயில் மாநகராட்சி அதிகாரங்கள் மீது உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர் இந்த பணிகளை செய்யாதது ஏன்?’’ என்று கேள்வி எழுந்தது.

ஆளுநர் அனில் பைஜால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,‘‘ குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணி. இதை கண்காணிப்பது மட்டுமே எனது வேலை’’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘‘குப்பையை அகற்றுவது முதல்வரா? அல்லது துணைநிலை ஆளுநரா? என்பதை த்திய அரசும், டில்லி அரசிடம் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.