ஸ்டெர்லைட் ஆலையை உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை என்றும், ஆலையை உடனே திறக்க முடியாது என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம்  சொல்லவில்லை என்றும், ஆலை உடனே திறக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதன்படியே உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது என்று கூறினார்.

இநத் வழக்கில் , உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்ல என்றவர், ஆலைக்கு எதிராக மாநில அரசு சார்பில்  உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும் என்றும் ழகூறினார்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை (ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை என்றும் தெளிவு படுத்தினார்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.