டில்லி:

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் ஆளுநர் நியமனம் செய்தது செல்லும் என்றும் அறிவித்தது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்ற்ததில்  புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி, புதுவை பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை   ஜீலைக்கு ஒத்தி வைத்தது.

புதுச்சேரியை சேர்ந்த 3 பாஜகவினருக்கு ஆளுநர் கிரண்பேடி சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அவர்களை எம்எல்ஏக்களாக ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம், மறுத்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 3 பா.ஜ., நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 4 பாஜ எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.