டெல்லி:
யானைகள் அடுத்தடுத்து மரணம் நடைபெறுவதை தடுக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு மற்றும் 13 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

யானைகள் உள்பட வன விலங்குகள் தொடர்ந்து மரணம் அடைந்து வரும் நிலையில், விலங்குக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பான விசாரணையைத் தொடர்ந்து, இதுகுறித்து  பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரளம் உள்பட 13 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.
இது தொடா்பாக சுபம் அவஸ்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கேரளாவில் யானை வெடி யுடன் கூடிய அன்னாசி பழம் கொடுத்து கொல்லப்பட்டது உள்பட வனவிலங்குகளை காப்பாற்ற வனத்துறையில் உள்ள  ஊழியா்கள் தட்டுப்பாடு, பொதுமக்களின் அறிவியல் ரீதியான கவனக்குறைவு, கடந்த 1992இல் ‘யானைகளுக்கான திட்டம்’ என்ற பெயரில் மத்திய அரிசி உற்பத்தி செய்தது. ஆனால் அவற்றை யானைகள் உட்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், 1960 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன விலங்குகள் மீதான தாக்குதல் தடுப்புச் சட்டத்தில் நவீன காலத்துக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகளை சோக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளவும், நவீன உபகரணங்களுடன் வனத் துறையை மேம்படுத்தவும், யானைகள் மீதான வன்முறை அச்சுறுத்தலில் இருந்து அவற்றைப் பாதுகாக்க யானைகளைக் கண்காணிப்பதற்கான வழிமுறை களை வெளியிடுவதற்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஆா்.சுபாஷ் ரெட்டி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரளம், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், மேகாலயம், நாகாலாந்து, ஒடிஸா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.