காங்கிரஸ் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

டில்லி,

மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பிற்கு தடை கோரி காங்கிரஸ் தொடர்ந்துள்ள வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்வதற்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது

குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் போட்டியிடு கின்றனர்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அகமது படேல் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதாவின் குதிரை பேரம் காரணமாக குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தமுறை குஜராத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது நடைமுறைப்படுத்தப் பட்டால், குதிரை பேரத்து மயங்கும் எம்எல்ஏக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கும் நிலை உருவாகும்.

இதன் காரணமாக, ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டுப்போடும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

ரிய வழக்கு – இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவு.*