காவிரியில் தொடர்ந்து 2000 கனஅடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டில்லி,

ச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களின் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்தும் கூறியிருந்தது.

இந்த வழக்கை இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நிதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.

அதைத்தொடர்ந்து காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தொடர்ந்து  2000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணை ஜூலை 11ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

You may have missed