குடிமக்கள் பதிவேட்டில் 10% பேர் விடுபட்டதை மீண்டும் சரிபார்க்க வேண்டும்…..உச்சநீதிமன்றம்

டில்லி:

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 10 சதவீத மக்கள் விடுபட்டதை மீண்டும் சரிபார்க்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு கடந்த ஜூலை 30ம் தேதி வெளியிட்டது. இதில் 2.89 கோடி பேர் சேர்க்கப்பட்டிருந்த. மேலும், 40 லட்சத்தக்கு 70 ஆயிரத்து 707 பேரில் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை. இதில் 37 லட்சத்து 59 ஆயிரத்து 630 பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சத்து 48 ஆயிரத்து 77 பேரது பெயர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பட்டியலின் அடிப்படையில் 40 லட்சம் மக்கள் மீது எவ்வித முடிவும் எடுக்கப்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நரிமேன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 10 சதவீத மக்கள் விடுபட்டதை மீண்டும் சரிபார்க்க வேண்டும். இது நீதிமன்ற திருப்திக்காக நடத்தப்படும் மாதிரி சர்வே மட்டுமே. இது எப்போது தொடங்கும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றனர்.