பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசு தீர்மானிக்கலாம்?: தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீது உச்சநீதி மன்றம் தகவல்

சென்னை:

ட்டாசு வெடிக்க மேலும் 2 மணி நேரம்  அனுமதி  கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க மறுத்த நீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அந்தந்த  மாநில அரசு தீர்மானிக்கலாம் என்று விளக்கம் அளித்து உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த 23ந்தேதி உச்சநீதி மன்றம் பட்டாசு வெடிக்கவும், தயாரிக்கவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பு கூறியது.

அதில் குறிப்பாக தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்க்கான இரவு 8 மணி முதல் 10 மணி வரை இருக்கும் நேரத்தை, காலை அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என்று உறுதிப்பட தெரிவித்து விட்டனர்.

மேலும், தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி என்பதை மீண்டும் உறுதி படுத்திய நீதிபதிகள், அந்த நேரம்  எப்போது என்பதை  தமிழக அரசே முடிவு செய்யலாம் என  தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.