அசாம் என்ஆர்சி பட்டியலை மறுஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதி மன்றம்

டில்லி:

சாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், இது குறித்து மறு ஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி), 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில், 2.9 கோடி பேரின் பெயர்கள் குடிமக்கள் பட்டியலில் இருந்தபோதிலும், சந்தேகத்தின் அடிப்படையில் ஏறத்தாழ 40 லட்சம் பேரின் பெயர்கள் அதில் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

இது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பதிவேட்டில், பெயர் விடுபட்டவர்கள் தங்களின் பெயரை சேர்ப்பது குறித்து, உள்ளூர் அதிகாரிகளை நாடலாம் என்றும், அதற்குரிய படிவத்தை நிரப்பி  ஆகஸ்ட் 7ந்தேதி  முதல் அந்தந்த பகுதிகளை சேர்ந்த  உள்ளூர் அதிகாரிகளை அணுகி வழங்கலாம் என்றும் உச்சநீதி மன்றம்  தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து திரிணாமூல் காங்கிஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, இதுகுறித்து யாரும் பீதி அடைய தேவை யில்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது வாத, பிரதிவாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறை களில் பல்வேறு முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதன் காரணமாகவே ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆட்சேபங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும், என்ஆர்சி பட்டியலில் ஏறத்தாழ 10 சதவீதம் பெயர்கள் (40 லட்சம் பேர்) சேர்க்கப்படாதது தொடர்பாக மறு ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அது, நீதிமன்றத்தின் திருப்திக்காக மேற்கொள்ளப்படும் ஒரு மாதிரி ஆய்வுதானே தவிர, இந்த விவகாரத்தில் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இ

தையடுத்து மறுதேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.