கொரோனா பரவல் – இம்ரான்கான் அரசுக்கு பாக்., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென இம்ரான்கான் தலைமையிலான அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.

அண்டை நாடான பாகிஸ்தானில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.08 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2,170 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இம்ரான்கான் அரசுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது; நாட்டில், கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த நிலையை, அரசு, சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.