தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்ட அனுமதி: உச்சநீதி மன்றம்

சென்னை:

தீ பிடித்து எரிந்து  சேதத்தை ஏற்படுத்திய தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட  சென்னை சில்க்ஸ்  நிர்வாகத்துக்கு அரசு தடை விதித்திருந்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சென்னை தி.நகரில் பிரபலமான சென்னை சில்க்ஸ் கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த 9 மாடி கட்டிடத்தில், 2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத்தின் பெரும் பகுதி  சேதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து மீண்டும் கட்டிடடம் கட்ட சென்னை சில்க்ஸ் நிர்வாகம் அரசிடம் அனுமதி கோரியது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் வேகமாக செயல் பட்டு  அதற்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து  விறுவிறுப்பாக கட்டிட பணிகள் நடைபெற்று வந்தன.

சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக  சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்தை கட்டி வருவ தாக அந்த பகுதியை சேர்ந்தவர்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இனறு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்படுவதாக வாதிடப்பட்டது. சென்னை சில்க்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். உரிய அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்டப்படுவதாக அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுதாரரின்  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, கட்டிடத்தை கட்டுவதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.