Random image

சமூக வலை தள கண்காணிப்பு மைய திட்டத்தில் யுஐடிஏஐ பங்களிப்பு என்ன?…உச்சநீதிமன்றம்

டில்லி:

சமூக வலை தள கண்காணிப்பு மைய திட்டத்தில் ஆதார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யுஐடிஏஐ பங்கு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களை கண்காணிக்க தனியாக மையம் அமைக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த முடிவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மொகுவா மோல்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 13ம் தேதி நடந்த விசாரணையின்

இது குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் மக்களை கண்காணிக்கும் அரசு என்று மத்திய அரசு மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.

இந்நிலையில், ஆதார் தயாரிப்பில் உள்ள யுஐடிஏஐ.யில் சமூக வலை தள முகமை மத்திய அரசின் சமூக வலை தள கண்காணிப்பு மையத்துடன் இணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலை தள விவாதங்களில் ஈடுபடுவோரது ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் யுஐடிஏஐ செயல்படுவதாக கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘யுஐடிஏஐ.யின் பங்களிப்பு குறித்து மறு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய அட்டார்னி ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த சமூக வலை தள கண்காணிப்பு மைய திட்டத்திற்கான சமூக வலை தள முகமையை தேர்வு செய்யும் பொறுப்பு யுஐடிஏஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் தனி நபர் உரிமை மீறல் நடைபெறும் என்று கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.