பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதி மன்றம்

சென்னை

சிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேலுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  பதவி ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோன் பூசன், நாகேஸ்வர ராவ் அமர்வு முன்பு இன்ற விசாரணைக்கு வந்தது.

அப்போது,  தமிழக அரசு தரப்பிரல் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதாக  தெரிவித்தார். மேலும், அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்ததோடு, ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லாது என்றும் கூறினார்.

மேலும், ஓய்வு பெற்ற அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு யானை ராஜேந்திரன் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.  இதையடுத்து, அவர் மனுதாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் அளித்த நீதிபதிகள், அடுத்த மாதத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும், அடுத்த விசாரணையின்போது, தமிழக அரசு கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.