டில்லி:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உண்டா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.