”எழுத்தாளர்களின் கற்பனைக்கு தடை விதிக்க முடியாது ”- ‘ மீஷா ‘ நாவல் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

சர்ச்சையை ஏற்படுத்திய மலையாள நாவலான ‘ மீஷா ‘ வை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், எழுத்தாளர்களின் கற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Meesha

மலையாள பத்திரிகையான மாத்ருபூமியில் எஸ்.ஹரீஷ் என்பவர் எழுதிய மீஷா நாவலின் அத்யாயங்கள் வெளி வந்துள்ளன. இதில் இந்து அர்ச்சகர்களையும் , பெண்களையும் தவறாக சித்தரிப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஒருசிலர் இந்த நாவலை தடை செய்யும் படி போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நாவலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ராமகிருஷ்ணன் அளித்த மனுவில், “ புத்தகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும், உரையாடல்கள் பெண்களை பாலியல் பொருளாக சித்தரிக்கின்றன. இது குழு வன்முறையை தூண்டிவிடக் கூடும். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், சந்திரசந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாராணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு புத்தகத்தை துண்டு துண்டாக வாசித்து விட்டு குறை கூடக்கூடாது. முழுவதுமாக வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளர்களின் சுதந்திரமன கற்பனையை கட்டுப்படுத்த முடியாது என்றும், இலக்கிய படைப்புகளை தடை செய்ய இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூர் “ இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள், இணைய காலத்தில் இதை ஒரு பிரச்சனையாக மாற்றுகிறீர்கள். இதை மறந்துவிட்டால் நன்றாக இருக்கும் “ என்று தெரிவித்தார்.

இது போன்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களை மாநில அரசால் பொறுத்துக் கொள்ள முடியாது என அம்மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த நாவலின் உரையாடலை கொண்டு சமூக ஊடங்களில் ஒரு சில விவாதங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மாத்ரூபூமி இதழில் நாவலை தொடர்ந்து வெளியிடுவதை ஹரீஷ் நிறுத்தி விட்டார்.

கார்ட்டூன் கேலரி