போபர்ஸ் பீரங்கி வழக்கு மறுவிசாரணை கோரிய சிபிஐ மனு டிஸ்மிஸ்! மோடி அரசுக்கு மேலும் ஒரு இடி

டில்லி:

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இது மோடி அரசுமீது விழுந்த மற்றொர அடி என்று விமர்சிக்கப்படுகிறது.

இதன் காரணமாக  முடிந்துபோன  போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி ரஃபேல் போர் விமான ஊழலை மறைக்க  சிபிஐ மூலம் பாஜஅரசு எடுத்த நடவடிக்கைக்கு உச்சநீதி மன்றம் முற்று புள்ளி வைத்து உள்ளது.

போபர்ஸ் வழக்கு முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்திய பாரதியஜனதா அரசை திருப்தி படுத்தும் நோக்கில், சிபிஐ,  பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க விரும்புவ தாக நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் துணை குழுவிடம் கடந்த ஆண்டு தெரிவித்தது. சிபிஐ-ன் இந்த கோரிக்கைக்கு தொடக்கத்திலேயே  மத்திய அரசின் அட்டர்ஜி ஜெனரல் வேணு கோபால்  கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், அதையும் மீறி மோடி அரசு சிபிஐ மூலம் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக கூறி உச்சநீதி மன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது.

அப்போது, போபர்ஸ் பீரங்கி வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்று கூறி சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஏற்கனவே ஆதார் வழக்கில் உச்சநீதி மன்றம் மோடி அரசை கடுமையாக சாடிய நிலையில், தற்போது ரஃபேல் போர் விமான ஊழலை மறைக்கும் விதத்தில் போபர்ஸ் பீரங்கி விவகாரத்தை கிளப்ப நினைத்த மோடி அரசுக்கு மீண்டும் செமத்தியான அடி விழுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

போபர்ஸ் வழக்கு:

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,  1986-ம் ஆண்டு ஸ்வீடனில் இருந்து போபர்ஸ் பீரங்கிகளை ரூ1,437 கோடிக்கு கொள்முதல் செய்ததில் மிகப் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டில், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமான குவாத்ரோச்சிதான் இடைத்தரகராக செயல்பட்டார் என்றும்,  போபர்ஸ் பீரங்கிகளை கொள்முதல் செய்ய அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இது நாட்டில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதுகுறித்த வழக்கில்,இந்துஜா சகோதரர்களுக்கு பங்கு இல்லை என்று கடந்த 2005ம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சிபிஐ  தவறான தகவலகள் மூலம்  வழக்கை நடத்தி மக்களின் வரிப்பணம் 250 கோடி ரூபாயை வீணடித்துவிட்டது என்று  சிபிஐக்கு கண்டனமும் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்று இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குற்றவாளி இல்லை என கடந்த  2014-ல் டில்லி உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. டில்லி உயர்நீதி மன்ற  நீதிபதி கே.டி.கபூர் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தார்.

இந்நிலையில், பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்து  4ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், தற்போது வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரணை செய்ய விரும்புவதாகவும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக வும் கூறி சிபிஐ மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பாஜ அரசு இந்த நடவடிக்கை மீண்டும் கிளறியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதி மன்றம் மீண்டும் மத்தியஅரசு மீது சாட்டையை சுழற்றி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.