திருவனந்தபுரம்:

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள பிரபல நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து  தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்ர். மேலும் இந்த வழக்கு காரணமாக, திலீப்பின் மனைவி காவியா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது.

இதற்கு தடை கேட்டு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திலிப் மீதான  விசாரணையை 6 மாதங்களில் முடிக்கும்படியும்,  பலாத்கார வீடியோ காட்சியின் உண்மை தன்மையை சண்டிகரில் பரிசோதிக்கும்படியும்  உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பலாத்கார வீடியோ காட்சியின் உண்மை தன்மை அறிக்கை கிடைக்கும் வரையில், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் திலிப் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை   நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு விசாரித்தது. அப்போத,  திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  இந்த அறிக்கை கிடைக்கும் வரையில் அவரிடம் (திலிப்)  மட்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டாம் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.