டெல்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்று 100 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஏற்கனவே சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அமலாக்கத் துறை கைது செய்துள்ள வழக்கில்,  ஜாமின் கோரிய சிதம்பரத்தின்  மேல்முறையீட்டு மனு கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வந்து நிலையில், இன்று நடைபெற்ற இறுதி விசாரணையைத் தொடர்ந்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.

அவருக்கு சிறை உணவுகள் ஒத்துக்கொள்ளாத நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜாமின் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதி மன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது.

இதையடுத்து,  உச்சநீதி மன்றத்தில் சிதம்பரம் தரப்பில், சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமின் கோரப்பட்ட நிலையில், கடந்த மாதம் அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியது. இதற்கிடையில், அதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்த கைது செய்ததால், அவரால் சிறையைவிட்டு வெளியே வர முடியாத நிலை நீடித்து வந்தது.

அதைத்தொடர்ந்து,  அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டு  நீதிமன்ற படிகளை ஏறி வருகிறார். ஏற்கனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர்நீதி மன்றமும் ஜாமின் வழங்க மறுத்து விட்ட நிலையில்,  உச்சநீதி மன்றத்தில்  ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று இறுத விசாரணை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதம்பரத்தை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும், இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்து விசாரணை செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தது.

மேலு;k. பொருளாதார குற்றங்கள் மிகவும் அபாயகரமானது. அது தேச நலனை பாதிக்கும் என்றும்,  அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும் போது, சாதாரண மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்றும் அவருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.