ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்றம்

டெல்லி: ஹத்ராஸ் தலித் இளம்பெண் கும்பல் வன்புணர்வு வழக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உ.பி மாநிலம் ‘‘ஹத்ராஸ்’’ பகுதியைச் சேர்ந்த தலித்இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடுரமாக தாக்கப்பட்டு, உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த இளம்பெண் கற்பழிக்கப்படவில்லை என்று உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகள் தெரிவிப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இதனால் சர்ச்சைகள் ஏற்பட்டு, மாநில அரசுமீது  குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களில்,   ஹத்ராஸ் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இதில் நடந்த உன்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்.மேலும் சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த  மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து,  ‘‘ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றமே ஹத்ராஸ் வழக்கு விசாரணையை கண்காணிக்கும். சிபிஐ தனது நிலை அறிக்கைகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றும், சிபிஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருத்தமானது.

தற்போதைய நிலையில், இவ்வழக்கை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றும் அவசியம் தற்போது இல்லை, தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை முடிவடைந்த உடன் வழக்கை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக உரியமுடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

You may have missed