டில்லி,

தீபாவளி பண்டிகையின்போது டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாசுக்கள் அதிகரிப்பின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படு வதாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

தீபாவளி அன்று தலைநகர் தில்லியில் பட்டாசு வெடிக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வாகனங்களில் வெளிவரும் புகை போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக  சுவாசப் பிரச்னைகள், நுரையீரல் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும்  சுற்றுப்புறச்சூழல் பெருமளவு அங்கு பாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, இந்த வருடம்  தீபாவளி அன்று டில்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், மாசு ஏற்படும் என்பதால் தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாதம் இறுதி வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை செய்து அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதி மன்றத்தில் இந்த உத்தரவுக்கு, சமூக ஆர்வலர்களும், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். அதே வேளையில் மத விவகாரங்களில் கோர்ட்டு தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.