Random image

ஓரினச் சேர்க்கை குற்ற செயலாக கருதப்படும் சட்டப்பிரிவு 377 செல்லுமா, செல்லாதா ? – நாளை தீர்ப்பு

ஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது சட்ட பிரிவு செல்லுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற முக்கிய தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது. மனம் ஒத்து நடைபெறும் ஓரினச் சேர்க்கை உறவை குற்ற செயலாக கருதும் சட்டத்தை எதிர்த்து நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

homosexuality

’ ஒருத்தனுக்கு ஒருத்தி ‘ என்ற காலாச்சாரத்தை கொண்டது நமது நாடு. நமது பண்பாடு கால காலத்திற்கும் வழிவழியாய் பின்பற்று வருகிறது. நாகரீகம் வளர தொடங்கியதும் நமது பழக்க வழக்கங்கள், ஆடைகளை மாற்றிக்கொண்ட மக்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதிலும் மாற்றங்களை கொண்டு வர தொடங்கினர். ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையை தவிர்த்து, வெளிநாடுகளை போன்று ஆணோடு ஆண்டும், பெண்ணோடு பெண்ணும் வாழ ஆரம்பித்து விட்டனர்.

இவ்வாறு ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வதை ஒரினச்சேர்க்கையோடு வாழ்கிறோம் என அவர்கள் பகிரங்கமாக வெளியே சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 377ஐ நினைவு கூர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 377 என்ன சொல்கிறது என்றால், இயற்கை நியதிக்கு மாறாக ஆணும், பெண்ணும் எப்படி இணைந்து வாழ்ந்தாலும் அது தப்பு என்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. மேலும், இந்த உறவு முறை அருவெறுப்பானது என்றும் சட்டம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஓரின பாலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி வழங்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீண்ட நாட்களாகவே விசாரித்து வந்தது. ஒவ்வொரு விசாரணையின் போதும், பல்வேறு விதமான விவாதங்களுக்கான முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

“ சமூக பண்பாடு காலத்து காலம் மாறுபடும், வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டமும் தன்னை மாற்றிக்கொள்ளும் “ என்றனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இத்தகைய வழக்கின் முடிவை உச்சநீதிமன்றத்திடமே விடுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 377 செல்லுமா அல்லது செல்லாதா என்பது குறித்து நாளை தெரிய வரும். நாளை வழங்க இருக்கும் தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முடிவாகவே பார்க்கப்படுகிறது.