Random image

ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம்: உச்ச நீதிமன்றம்

டில்லி: 

ர்செல் – மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியது உச்சநீதி மன்றம்.

ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கு, கருப்பு பணம்  மற்றும் 2ஜி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனது விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்குள்  விசாரித்து முடிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்குகளை விசாரிக்க  மேலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு விசாரித்தது. அப்போது,  மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்குகளை விசாரிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் ஏற்கனவே 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, மத்திய அரசு வழக்கறிஞர், வழக்கு காரணமாக மேலும் சில விசாரணைகள் மேற்கொண்டியதிருப்ப தால், 2 முதல் 3 மாத காலம் அவகாசம் தேவை என்று கோரினார்.

அதையடுத்து மேலும் 3 மாதம் அவகாசம் வழங்குவதாகவும்,  அதற்குள் இந்த வழக்குகளை விசாரணை செய்து முடித்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.