சபரிமலை விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் மீது இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை!

டில்லி:

பரிமலை தொடர்பாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது.  இது கேரள மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,கடந்த மாதம் ஐப்பசி மாத பூஜைக்காக  ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அய்யப்ப பக்தர்கள் போராட்டம் மற்றும் தந்திரிகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள்   திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், உச்சநீதிமன்றம் சபரிமலை கோவில் தொடர்பான தனது தீர்ப்பினை திரும்ப பெற வேண்டும் எனவும், மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட  48  அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

நாளை மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் மண்டல பூஜையில் கலந்துகொள்ள 550 இளம்பெண்கள் கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்  இன்றைய விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Supreme Court today will trial on review petitions about Sabarimala verdict, சபரிமலை விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் மீது இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை!
-=-